ரிலையன்ஸில் முதலீடு: முயற்சியை விடாத அராம்கோ

47 Views
Editor: 0

புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன வணிகப் பிரிவில், 15 பில்லியன் டாலர் அதாவது, 1.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்குவது குறித்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, சவுதி அராம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது..

ரிலையன்ஸில் முதலீடு: முயற்சியை விடாத அராம்கோ:

 

புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன வணிகப் பிரிவில், 15 பில்லியன் டாலர் அதாவது, 1.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்குவது குறித்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, சவுதி அராம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனம் சவுதி அராம்கோ, இந்தியாவில் ரிலையன்ஸ் உடன் கூட்டு சேர்வதன் மூலம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன பிரிவிலும் முன்னிலை வகிக்கலாம் என்பதால், ரிலையன்ஸில் முதலீடு செய்ய முயற்சித்து வருகிறது. பல மாதங்களாக நீடித்து வரும் இந்த டீல், இன்னும் முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. முகேஷ் அம்பானியும், எரிசக்தி துறையில் உள்ள எதிர்பாராத சூழல் காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் டீல் தள்ளிப்போவதாக தெரிவித்திருந்தார்.
latest tamil news

சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமின் நாஸர் கூறியதாவது: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன பிரிவில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. முயற்சியை நாங்கள் கைவிடவில்லை. ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் குறித்து, பங்குதாரர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

 

வணிகச் செய்திகள்