நகரங்களை விட கிராமங்களில் விலைவாசி அதிகரித்தது!!
நுகர்வோர் பணவீக்கத்தின்(Consumer Price Inflaation) ஜூலை 2020 காண கணக்குகள் இன்று மாலை வெளியாகி இருக்கிறது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சர் இதனை வெளியிட்டுள்ளார். ஜூலை2020 நுகர்வோர் பணவீக்கம் 6.3% ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூன் 2020 மாதம் நுகர்வோர் பணவீக்கம் 23% சதவீதமாக இருந்தது. ஆனால் ஜூலை 2020 இல் இந்தியாவின் நகர்ப்புறங்களில் பணவீக்கம் 5% சதவிகிதமாகவும் கிராமப்புறங்களில் 7.4% சதவீதமாகவும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 2020 காண நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்து பணவீக்கம் 9.62% சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. ஜூன் 2020 பணவீக்கம் நுகர்வோர் உணவு பணவீக்கம் 8.72% சதவிகிதமாக இருந்தது. மேலும் இந்தியாவின் நகர்ப்புறங்களில் உணவு பணவீக்கம் 9.05% சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 9.89% சதவிகிதமாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 2020 இந்திய மாநிலங்களுக்கான சராசரி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முட்டை 8.79%
மீன் இறைச்சி 18.81%
எண்ணெய் & கொழுப்புகள் 12.41%%
தானியங்கள் 6.96%
பழங்கள் 0.13%
காய்கறிகள் 11.29%%
பருப்பு வகைகள் 15.92%
சர்க்கரை 3.60 %
எரிபொருள் 2.80 %
மசாலா பொருட்கள் 13.27 % அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் அறிக்கை 6.96% சதவிகிதமாக தமிழகத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழக மாநிலத்திற்கு மட்டும் என மட்டும் வைத்தாலும் நுகர்வோர் பணவீக்கம் 7.24% சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவைப் போலவே தமிழகத்தில் நகர் புறத்தை விட கிராமப் புறத்தில் தான் பணவீக்கம் அதிகரித்துள்ளது.