டிக் டாக் வணிகத்தை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சி

39 Views
Editor: 0

புதுடில்லி: சீன செயலியான, 'டிக் டாக்' வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து உள்ளன..

டிக் டாக் வணிகத்தை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சி:

 

புதுடில்லி: சீன செயலியான, 'டிக் டாக்' வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.
'டிக் டாக் இந்தியா' வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து, அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான, 'பைட்டான்ஸ்' உடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த மாதம் பேச்சு நடத்தியதாகவும்; இன்னும் டீல் முடியவில்லை என்றும், 'டெக்கிரஞ்ச்' எனும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது குறித்து ரிலையன்ஸ், பைட்டான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை. கடந்த மாதம் மத்திய அரசு, இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட பிரச்னையால், தேசிய பாதுகாப்பு கருதி, 59 சீன செயலிகளை தடை செய்து அறிவித்தது. அதில், டிக் டாக் செயலியும் ஒன்று.


latest tamil news

இந்நிலையில், டிக் டாக் இந்தியா, ரிலையன்ஸ் வசம் செல்லக்கூடும் என தெரிகிறது. இந்தியாவை போலவே அமெரிக்காவிலும், டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்க டிக் டாக் வணிகத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதன் தொடர்ச்சியாக, டுவிட்டர் நிறுவனமும், டிக் டாக் வணிகத்தை வாங்குவது குறித்த தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளது. டிக் டாக் இந்தியா வணிகம் குறித்த பேச்சு, விரைவில் முடிவுக்கு வரும் என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

வணிகச் செய்திகள்