பருத்தி விலை கடும் வீழ்ச்சி.! அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை.!!

42 Views
Editor: 0

திருப்பூர் :தாராபுரம் பகுதியில் பருத்தி விலை கடும் வீழ்ச்சியால் நெல் கரும்பு பயிர்களை போலவே பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

பருத்தி விலை கடும் வீழ்ச்சி.! அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை.!!

 

திருப்பூர் : தாராபுரம் பகுதியில் பருத்தி விலை கடும் வீழ்ச்சியால் நெல் கரும்பு பயிர்களை போலவே பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ,அலங்கியம், மூலனூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர்களில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூ70ஆயிரம் செலவில் 6 மாதங்களில் பலன் தரும் வகையில் சாகுபடி செய்யப்படும் பருத்திக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு குவின்டால் 7ஆயிரம் ரூபாயில் துவங்கி ரூ8000 வரை விற்பனையாகி வந்தது.

இதனால் விவசாயிகள் பலரும் ஆர்வமுடன் பருத்தி சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரானா நோய் தொற்றால் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் எதிரொலியாக நூற்பாலைகள் அனைத்தும் 50 சதவீத தொழிலாளர்களை கொண்டு குறைந்த அளவே உற்பத்தி செய்து வருவதால் நூல் ஏற்றுமதி எதுவும் நடைபெறவில்லை.

தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வரும் வியாபாரிகள் பருத்திக்கு வழக்கமான விலைகொடுத்து வாங்க முன்வரவில்லை ,இது தவிர தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி விற்பனையை மறைமுக ஏல முறையில் நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக மூலனூர் உள்ளிட்ட பருத்தி ஏலம் நடை பெற்றுவரும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் மறைமுக பருத்தி ஏலம் நடைபெறத் துவங்கியது.

இதன் தொடர்ச்சியாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ 7 ஆயிரத்து 850 என்று விற்பனை செய்து வந்த நிலை மாறி நடப்பு வாரத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ 4350 ரூபாய் விலையில் விற்பனையாகியது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு குவிண்டாலுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை குறைந்தது.

தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு ஏக்கர் பருத்தியை சாகுபடி செய்யவே 70000 ரூபாய் செலவழிக்கும் நிலையில் பாசன நீர் தடையின்றி கிடைக்கும் விவசாய நிலங்களில் ஏக்கருக்கு சராசரியாக 10 முதல் 12 குவிண்டால் வரை பருத்தியை அறுவடை செய்தால் ஒரு ஏக்கரில் பயிர் செய்த விவசாயிக்கு சுமார் 30000 ரூபாய் வரை நஷ்டம் அடைய வேண்டியுள்ளது.

இதனால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டு செல்லாமல் ஆயிரக்கணக்கான டன் பருத்தியை வீடுகளிலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி தேக்கி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் தங்களது வீடுகளுக்குள் கூட படுத்து உறங்க முடியாமல் மழையிலும் பனியிலும் வீட்டின் வெளி முற்றத்திலேயே படுத்து உறங்கும் நிலை நீட்டிப்பதுடன் சாகுபடி செலவுக்காக வங்கிகளிலும் தனியார் நிதி நிறுவனங்களிலும் வட்டிக்கு கடன் வாங்கிய தொகையை திருப்பி செலுத்த முடியாமல் கண்ணீர் வடிப்பதாக வேதனையுடன் கூறினர்.

தமிழக அரசு நெல் கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு ஆதார விலை ஒன்றை நிர்ணயம் செய்து அரசே கொள்முதலையும் செய்து வருவதைப் போல் பருத்தி விவசாயிகளின் பிரச்சனைகளை போக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலம் நேரடி ஏல முறையில் பருத்தியைஅரசே கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வணிகச் செய்திகள்