சென்னை,
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 232 குறைந்தது:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு
காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில், தங்கத்தின் விலை (திங்கள்கிழமை) இன்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.232 குறைந்து, ரூ.40,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.29 குறைந்து, ரூ.5,071 ஆக இருந்தது.
அதே நேரத்தில், வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.74,100 ஆகவும் விற்கப்படுகிறது.