குழப்பத்தில் நகை பிரியர்கள்: நேற்று குறைவு; இன்று உயர்வு: 

11 Views
Editor: 0

குழப்பத்தில் நகை பிரியர்கள்: நேற்று குறைவு; இன்று உயர்வு: சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து விற்பனை....!.

குழப்பத்தில் நகை பிரியர்கள்: நேற்று குறைவு; இன்று உயர்வு: சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து விற்பனை....!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.40,384க்கு க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.


பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்து வரும் வண்ணம் உள்ளது. ஆனால், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.40,384க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.17 உயர்ந்து ரூ.5,048 ஆக உள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் குறைந்து ரூ.72.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை, ரூ.72,700 ஆக உளள்து.

வணிகச் செய்திகள்