‘தங்கம் வாங்கனும்னா இப்பவே புறப்படுங்க’ : சவரனுக்கு ரூ.360 குறைவு..!
சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை, இன்று காலையில் தடாலடியாக குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கம் வாங்குவது குறைந்து, அதன் இறக்குமதியும் குறைந்துவிட்டது.
இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் குறைந்து மக்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ. 5,003ஆக விற்பனையானது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.360 சரிந்து ரூ. 40,024 க்கும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.72க்கு விற்பனை செய்யப்படுகிறது.