சென்னையில் பெட்ரோல் 12 காசுகள் விலை உயர்வு:

10 Views
Editor: 0

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 12 காசுகள் அதிகரித்து ரூ.84.64 என்ற விலையில் இன்று விற்பனை செய்யப்படுகிறது..

சென்னையில் பெட்ரோல் 12 காசுகள் விலை உயர்வு:

 

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 12 காசுகள் அதிகரித்து ரூ.84.64 என்ற விலையில் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் பெரும் மாற்றமின்றி காணப்பட்டது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயர தொடங்கியது.

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 12 காசுகள் அதிகரித்து ரூ.84.52 என்ற விலையில் நேற்று விற்பனையானது. ஆனால் டீசல் விலை தொடர்ந்து 28வது நாளாக மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டது.

 

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் அதிகரித்து ரூ.84.64க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் 29வது நாளாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.78.86 என்ற விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

வணிகச் செய்திகள்