மாதம் 638 ரூபாய் கட்டினால், அது 1 கோடியாக மாறுமா? இந்த இரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க!
சமீபத்தில் எந்த வெப்சைட்டுக்குள் போனாலும், ஒரு பிரபல வங்கியின் விளம்பரத்தை அடிக்கடி காண முடிந்தது. மாதம் 638 ரூபாய் என்ற வீதத்தில் 30 வருடம் விதிமுறை மற்றும் நிபந்தனைக்கு கீழ் செலுத்தினால், அது 1 கோடியாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பார்க்கும் போதே இதெல்லாம் சாத்தியமா? பகல் கொள்ளையா இருக்கும் போல, என்று நினைக்க தோன்றும். "ஒருத்தன ஏமாத்தணும்னா, முதல்ல அவன் ஆசையை தூண்டனும்" இது அந்த மாதிரியான ஒரு வேலையாக இருக்கலாம் என மனது சொல்லும்.
நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் விளம்பரம் நிஜம் தாங்க. ஆனால் விதிமுறைக்கு உட்பட்டது என்ற வாசகத்தை கவனமாக பார்க்க வேண்டும். அதில் தான் சூட்சமமே அடங்கியிருக்கிறது. இந்த திட்டம் வாகன காப்பீடு போன்றது. ஒரு ஆண்டுக்கு பிரிமியம் சொல்லப்பட்டுள்ளது. ஆண்டு முடிந்ததும் அவர்கள் பொறுப்பு
வாகன காப்பீட்டு தொகை வாகனம் சேதம் ஆனால் கிடைக்கும். இதில் காப்பீடு செய்தவர் உயிர் இழந்தால் காப்பீட்டு தொகை கிடைக்கும். நாம் நினைப்பது போல இது சேமிப்பு திட்டம் கிடையாது. 30 வருடத்திற்கு மாதம், 638 ரூபாய் கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இடையில் 20ஆவது வருடத்தில், பாலிசி போட்ட நபர் இறந்துவிட்டாலும் கூட, அவரது குடும்பத்திற்கு 1 கோடி கிடைக்கும். மற்றபடி, 30 வருடத்திற்கு மேல் பாலிசி போட்ட நபருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால், போட்ட பணத்தை எதிர்பார்க்க முடியாது.
விளம்பரத்தை பார்த்த உடனே சொற்ப காசு போட்டால், ஒரு கோடி வரும் என்ற ஆசை நமக்குள் வந்து விடும். இந்த நேரத்தில் "ஆசை வருவது தவறில்லை. ஆனால் ஆசையுடன் அறிவையும் உபயோகித்தால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்" என்று எங்கயோ படித்த வாசகம் நினைவில் வந்து போகிறது. இதே போல இருந்தாலும், சில நிறுவனங்கள் நீங்கள் கட்டிய தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை, பாலிசி காலம் முழுமையாக நிறைவு செய்கையில், திரும்பப் பெரும் வகையில் மாற்றியுள்ளதாக கேள்விப்பட்டேன். பாலிசி முகவரிடம் விசாரித்து பின்னர், எதுவாக இருந்தாலும் கையெழுத்து போடுங்கள்.