தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று மாலை முதல்வர் உரை

தமிழகத்தில் ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு முதல்வர், மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ்-2 மறுவாய்ப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு?

மார்ச் 25-ந்தேதிக்குப்பின் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

நண்பர்களுடன் சூதாட்டம் சென்னையில்,, நடிகர் ஷாம் கைது ‘ஊரடங்கால் பொழுதுபோகவில்லை’ என்று வாக்குமூலம்

நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னையில் நடிகர் ஷாம் கைது செய்யப்பட்டார்.12-பி’, ‘இயற்கை’, ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ உள்பட ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் ஷாம்.

ரேஷன் கடைகளில் இனி பயோமெட்ரிக் மூலம் பொருட்கள் வழங்க திட்டம்

நியாயவிலைக் கடைகளில் மேம்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளைக் கொண்டு, உணவுப் பொருட்களை வழங்க உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.

நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது தான் சரியான முடிவா? : பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

சென்னை : நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் ஜூலை 30-ல் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்

ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.