கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து:

கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு ஒத்திவைப்பு : உள்துறை அமைச்சகம் ஆலோசனை..!

நீட் தேர்வை நடத்த நாடுமுழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மேலும் ஒருமாதம் ஒத்திவைப்பது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு!!

சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கான ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண்கள் இன்று வெளியிடப்படுகிறது.

கல்வித் தொலைக்காட்சி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வது இரட்டிப்பு மகிழ்ச்சி : முதலமைச்சர் பழனிசாமி!!

பிற மாநிலங்களுக்கு கல்வித் தொலைக்காட்சி முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தி தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசு கலைக்கல்லூரியில் சேர்க்கை- மாணவர்களுக்கு இன்று சேர்க்கை விவரம் தெரிவிக்கப்படும்

109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, மாணவர் சேர்க்கை வழிமுறைகள் மற்றும் கட்டண விவரங்கள் இன்று தெரிவிக்கப்பட உள்ளது.

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா: கல்லூரி மாணவர்கள் மூலம் விற்பனை- தலைவன் உள்பட 13 பேர் கைது

சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கஞ்சா கடத்தல் தலைவன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி - முழு விபரங்கள் உள்ளே...

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு செயல்முறை பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு 'துலிப்' (TULIP- The Urban Learning Internship Program ) என்னும் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வேலூர்: `பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி!’ - ரௌடி ஜானியை எச்சரித்த போலீஸ்

`வேலூரை நடுங்கவைக்கும் பிரபல ரௌடி ஜானி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால், `பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி’ என அறிவிக்கப்படுவார்’’ என்று தண்டோரா போட்டு தெரிவித்திருக்கிறது வேலூர் காவல்துறை.

குட்கா வழக்கு:திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு புது நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

சென்னை: சட்டசபைக்குள் 'குட்கா' எடுத்து சென்ற விவகாரத்தில், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டுள்ளது.